டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் பேசியதாவது ,நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது. ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது.
பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.இவை அனைத்துமே இந்திய ஓப்பனர்கள் ரோகித் – கே.எல்.ராகுலை குறிக்கின்றன.

இந்த தொடரின் பவர் ப்ளேவின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்த 4வது அணி இந்தியா ஆகும்.இதனை தான் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.