அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராகினார். பின்னர் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளரான , ஜோ பைடன் வெற்றி பெற்று தற்போது அதிபராக உள்ளார். இந்நிலையில், டிரம்ப் 2024-ம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிப்பு வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ் பெற்றதாகவும் மாற்றுவதற்கு அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை மீண்டும் ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற முதன்மையான பாதையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தேர்தலை சந்திக்க உள்ளதாக டிரம்ப் கூறியிருப்பது, அவரது ஆதரவாளர்கள் இடையே அளவற்ற உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது நோக்கம் குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.