ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை அடுத்து ரஜினி டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத்தின் இசையில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் தான் டான்.
காமெடி கலந்த எமோஷனல் படமாக வெளியான டான் அனைத்து விதமான ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியை இயக்கப்போவதாக தகவல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது ரஜினியின் 170 படத்தை சிபி இயக்குவதற்கான காரணம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் தர்பார் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. ஆனால் அப்படம் சரியாக போகவில்லை என்பதால் ரஜினி மீண்டும் ஒரு படத்தை செய்து கொடுப்பதாக லைக்கா நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார்.
டான் திரைப்படத்தின் மூலம் பெரிய வெற்றி கண்டுள்ள லைக்கா நிறுவனம் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் பெயரை ரஜினியிடம் பரிந்துரைத்தாகவும் அதற்கு ரஜினி தரப்பில் இருந்து டபுள் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பிறகு தான் தெரியவரும்.