திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் முக்கிய நபர்கள் வருகையின் போது பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்து பணியின் போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என பல்வேறு வகையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரில் ஊர்காவல் படையினரை வலுபடுத்தும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டது. இதில் 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதற்காக திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர ஊர்காவல்படையில் சேர விரும்பும் தகுதியுடைய நபர்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது. இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களின் எடை, உயரம், சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்டன. 28 காலிப் பணியிடங்களுக்கு 94 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 113 பேர் கலந்து கொண்டனர்