தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனுக்கு நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பரிசோதனைகளின் முடிவில் இருதய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவருக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவ குழு முடிவு செய்திருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமச்சந்திரனுக்கு தொடர்ந்து மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது.