Skygain News

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் – 4 நாட்கள் நடைபெற இருக்கும் மெகா சிறப்பு முகாம்

புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தத்தை 2023 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி தகுதி நாளாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்பணியை கண்காணிக்க தமிழகத்தில் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அத்துடன் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோருடன் கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அனில் மேஷ்ராம், தொழில்வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழக இயக்குநர் வெ.ஷோபனா, துணிநூல் ஆணையர் மா.வள்ளலார், வேளாண் துறை சிறப்புசெயலர் த.ஆபிரகாம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக தலைவர் சு.சிவசண்முகராஜா, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் சி.நா.மகேஸ்வரன், குறு, சிறு தொழில்கள் துறை சிறப்பு செயலர் ப.மகேஸ்வரி, நில நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையர் ச.ஜெயந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 4 நாட்கள் மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More