இந்திய அணியில் பும்ரா ,ஜடேஜாவை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது ரிஷப் பந்திற்கு காலில் காயம் ஏற்பட்டு, பெரிய கட்டு ஒன்றை போட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் இருப்பதால், ரிஷப் பந்தின் காயம் பெரிய பிரச்சினையாக தெரியவில்லை.
இருப்பினும், அணியில் வேறு எந்த பேட்டருக்காவது காயம் ஏற்பட்டால் ரிஷப் பந்த் களமிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இது அணிக்கு பெரிய பிரச்சினையாக மாறிவிடும். நிலைமை இப்படியிருக்க, ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டது குறித்து பிசிசிஐ அறிக்கைகூட வெளியிடவில்லை. அவருக்கான காயம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கும் எந்த பிசிசிஐ நிர்வாகியும் பதில் கூட அளிக்கவில்லை.

மேலும் இக்கயம் விரைவில் குணமடையுமா இல்லை வேறொரு மாற்று வீரரை நிர்வாகம் தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.