Skygain News

இதெல்லாம் காமெடியா ? லவ் டுடே பிரதீப்பை விளாசிய பிரபல நடிகை..!

கோமாளி” படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “லவ் டுடே” படத்தில் இயக்கி நடித்திருப்பார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய இளைஞர்களுக்கு அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் அமைந்திருந்தனால் பாக்ஸ் ஆஃபிஸில் 70 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில் கோமாளி படத்தில் நடிகர் ரஜினியை ட்ரோல் செய்து ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பிரதீப், லவ் டுடே படத்தில் இடம்பெற்ற சில வசனங்களின் மூலம் சில சர்ச்சைகளை சந்தித்தார். அந்த வகையில் தற்போது கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமான ஆர்.ஜெ ஆனந்தி தற்போது இயக்குனர் பிரதீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், லவ் டுடே படத்தில் அதிகமாக ஆண்களை நல்லவர்களாகவும் பெண்கள் மோசமானவர்கள் போல காமெடி காட்சிகள் அமைந்திருக்கிறது. படத்தில் கதாநாயகியின் தங்கைக்கு தவறான மெசேஜ் அனுப்பவில்லை என நிரூபித்த ஹீரோ பிரதீப் உத்தமன் நல்லவன். ஆனால், படத்தில் பிரபல நடிகையை பதம் பாக்கணும் என்று சொல்லும் போது இது காமெடி என எப்படி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

பெண்களை இன்னும் சினிமா துறையில் தவறாக சித்தரிப்பததை எவ்ளோ நாள் தான் பொறுத்துக் கொள்ள முடியும்” என மோசமாக விமர்சித்துள்ளார் ஆர்.ஜே ஆனந்தி.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More