தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழையானது அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது.
இதன் காரனமாக நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாலாஜாபேட்டை குடிமல்லூர் சாத்தம்பாக்கம் அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான இணைப்பு சாலைகளில் மழை நீர் முழுவதுமாக தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது மேலும் வெளிமாநிலிருந்தும் உள்ளூர் மாவட்டத்திலிருந்தும் செல்லக்கூடிய வாகனங்கள் இந்த மழை வெள்ளநீரால் மிதந்தவாறு பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் இந்த தண்ணீரில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுபோன்று மழை நீர் தேங்கும் பகுதியில் மழை நீரானது உடனடியாக வடிந்து செல்ல வழிவகை செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.