பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வருபவர் தான் ராபர்ட் மாஸ்டர்.ஒவ்வொரு சீசனிலும் இது போல் ஒரு காதல் கதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும்.அதுபோல இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை காதல் செய்வதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
தற்போது ரச்சிதாவிடம், ராபர்ட் மாஸ்டர் செய்துவரும் வேலைகள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரச்சிதா தெளிவாக தனது பக்கம் இருப்பதை கூறியும் விடாது தொந்தரவு செய்து வருகிறார்.இதனால் ரசிகர்கள் We Stand For Rachitha என பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல் ரச்சிதாவின் முன்னாள் கணவரும் ரச்சிதாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் போட்டுள்ளார்.
அதில் அவர், இதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், மேலும் இதற்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். ஒரு பெண் நட்பாக எல்லோரிடமும் மகிழ்ச்சியாக இருப்பதால் அவள் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லிவிடுவாள் என்று அர்த்தம் இல்லை.

எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ வசதியான சமுதாயத்தை உருவாக்க சில முட்கள் போன்ற மனிதர்கள் எறிய வேண்டும் என்ற பதிவை போஸ்ட் செய்து இருக்கிறார்.