பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ரச்சிதாவிற்கு ராபர்ட் மாஸ்டர் காதல் வலை வீசி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ராயல் மியூசியம் டாஸ்கில், ரச்சிதா தன்னை முதுகில் குத்திவிட்டதாக கூறி அழுதார் ராபர்ட். இதனால் அப்செட்டான ரச்சிதாவும் வருத்தப்பட, அதன்பின்னர் சாரி சொல்லி மீண்டும் கடலை போட ஆரம்பித்தார் ராபர்ட்.
இந்நிலையில், ரச்சிதாவின் கான்டாக்ட் நம்பரை ராபர்ட் கேட்டுள்ளார். கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த ரச்சிதா பக்கம் போன ராபர்ட், ‘2 வாரமா நான் உங்கிட்ட போன் நம்பர் கேக்குறேன். நியாபகம் இருக்கா? அசல் போனதுல இருந்து நான் நம்பர் கேக்குறேன்’ என்று கேட்க, ‘இது ஒரு விஷயம்ன்னு இப்படி கேட்டுட்டு இருக்கீங்களே.

நம்பர் சொன்னா நியாபகம் வெச்சுப்பீங்களா? பேப்பர் பேனா இருக்கா?’ என கேட்க, அவரோ, “அதற்கான சூழல் வந்தது நீதான் நம்பர் தரவில்லை” என கூறுகிறார். அதற்கு ரச்சிதாவோ, “அச்சோ மறுபடியும் மொதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணாதீங்க” என சொல்லிவிட்டு மீண்டும் சமைக்க துவங்கிவிட்டார்.