பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இதில் காதல் மன்னனாக வலம் வந்த ராபர்ட் மாஸ்டர் கடந்த வார வெளியேறினார்.ராபர்ட் மாஸ்டர் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என கருதிய ரசிகர்களுக்கு, அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல், ரச்சித்தாவின் பின்னால் சுற்றி கெடுத்துக்கொண்டார் என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் அளித்துள்ள பேட்டியில், எப்படியோ நரி கூட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்றார். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார் ராபர்ட் மாஸ்டர். விஷம் உள்ள பாம்பு தனலட்சுமி, விஷம் இல்லாத பாம்பு ஷிவின், கழுகு அசிம், புலி மணி, யானை ஜனனி, முயல் ஏடிகே, முதலை விக்ரம், சிங்கம் போல வீட்டில் யாரும் இல்லை, கமல் சார் மட்டும் தான் சிங்கம் என்றார்.மேலும், ரச்சித்தாவை என்ன என்று சொல்லவில்லையே என செய்தியாளர்கள் கேட்க, அவங்களை பத்தி கேட்காதீங்க ப்ளீஸ் என்றார் ராபர்ட்