Skygain News

ரச்சிதாவை பற்றி பேசிய ராபர்ட் மாஸ்டர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடந்துவரும் தொலைக்காட்சி டாஸ்க்கில் ராசிபலன் குறித்த காட்சி வருகிறது. அதில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள வட்டத்தில் ராபர்ட் மற்றும் ரச்சிதா அருகருகே இருப்பது போன்று உள்ளது.

இதனை ஷிவினிடம் கூறும் ராபர்ட், ‘நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல. பார்க்கவே சும்மா அழகா இருக்குதுல்ல’, என்றுவெட்கத்துடன் கூறி மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறார். ஏற்கனவே ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் வைத்த கண் வாங்காமல் பார்த்த வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.