இந்திய அணியின் ஸ்டார் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக T20 உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ஆனால் ஜஸ்பிரீத் பும்ராவின் இழப்பு இந்திய அணியை பாதிக்காது என முன்னாள் வீரரும், கவாஸ்கரின் மகனுமான ரோஹன் கவாஸ்கர் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, பும்ராவின் இடத்தை இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது. பும்ராவை ஆடும் லெவனில் பெற்றிருப்பது எந்தவிதமான அணியின் பவுலிங் யூனிட்டிற்கும் வலுசேர்ப்பதுதான். அவர் இருந்தால் அந்த பவுலிங் யூனிட்டின் வலிமையே வேற லெவல். பும்ரா இருப்பதன் சாதகத்தை இந்தியா இழக்கும்.
ஆனால் அதேவேளையில், அவர் இல்லாதது இழப்பா என்றால், கண்டிப்பாக இல்லை. ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டில் அவர் பெரிதாக டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை. அவர் இல்லாத அணியில், அதற்கேற்ப திட்டம் தீட்ட வேண்டும். புவனேஷ்வர் குமாரால் என்ன செய்யமுடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

இளம் வீரர்களை அழுத்தமான சூழல்களில் எப்படி பயன்படுத்த முடியும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். அதுதான் எதிர்காலத்திற்கும் நல்லது என்று ரோஹன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர் இவ்வாறு பேசியது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது