ரோஹித் ஷர்மா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 தொடர் நாளை துவங்கும் நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த ரோஹித் ஷர்மா T20 உலாக்கப்பையில் அர்ஷதீப் சிங்கை அணியில் ஏன் எடுத்தீர்கள் என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது ,‘‘அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அழுத்தம் நிறைந்த நேரங்களில் மிக துல்லியமாக யார்க்கர்களை வீசுகிறார். அதுவும் எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் தனது முதல் வருடத்திலேயே அபாரமாக பந்துவீசுகிறார். இவரை அனுபவமற்றவர் எனக் கூறிவிட முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார்” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்பட்டதால்தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்ற நேரத்தில் இவர் நமக்கு கிடைத்துள்ளார். ஆஸ்திரேலிய பிட்ச்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களால் சிறப்பாக செயல்பட முடியும். மேலும், இவரைப் போல திறமையானவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நிச்சயம் கீ பௌலராக இருப்பார்.

இவரை எப்போது, எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்’’ எனக் கூறினார்.இந்நிலையில் நடந்து முடிந்த ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் அர்ஷதீப் கடைசி வர்க்ளில் துல்லியமாக பௌலிங் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது