வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது.இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது ,எங்கள் அணியில் வீரர்களுக்கு சில காயம் பிரச்சனைகள் இருக்கிறது. இதன் அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
ஏனென்றால் வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் அணியில் விளையாடுகிறார்கள். அப்படி இருந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது .இந்திய அணிக்காக விளையாடும்போது 100% உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். இது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் அமர்ந்து ஏன் வீரர்கள் முழு உடல் தகுதி பெறாமல் அணிக்கு வருகிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
வீரர்களும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. அவர்களுடைய பனிச்சுமையும் நாம் கண்காணிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறினார். அக்சர்பட்டேல் , தீபக்சாகர் குல்திப் சென், ரிஷப் பந்து போன்ற வீரர்கள் காயம் ஏற்பட்டும் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
An innings to remember for lifetime by Rohit Sharma with an injured thumb.pic.twitter.com/w9l47zv1cZ
— Johns. (@CricCrazyJohns) December 7, 2022
இதனால் சரியான அணியை தேர்வு செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவும் நிலை ஏற்படுகிறது .இதனால் முழு உடல் தகுதியைப் பெற்ற பிறகு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே பிசிசிஐ மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.