இந்திய அணி வாழ்வா சாவா போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்டு த்ரில் வெற்றி பெற்றது.இதன் மூலம் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.தலில் பேட்டிங் செய்த இந்திய அணி சில வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்ற வீரர்கள் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் (50), விராட் கோலி (64), சூர்யகுமார் யாதவ் (30) என சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்களை அடித்தது.இதன்பின்னர் ஆடிய வங்கதேச அணிக்கு மழையின் காரணமாக 16 ஓவர்களில் 151 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர் லிண்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்களை குவிக்க, மற்ற வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை குவித்தனர். இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதிலும் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்க, வங்கதேச அணி 145/6 ரன்களை மட்டுமே குவித்தது.
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசியதாவது ,நான் மிகவும் அமைதியாகவும் இருந்தேன், அதே சமயம் பெரும் பதற்றமும் எனக்குள் இருந்தது. ஆனால் ஒரு அணியாக நிதானமாக இருந்தால் தான் திட்டத்தை செயல்படுத்த முடியும். இல்லையென்றால் சொதப்பிவிடும். பாதி ஆட்டம் வரை 10 விக்கெட்களும் அப்படியே இருந்தது ஆட்டத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டு சென்றிருக்கும்.
.@imVkohli bagged the Player of the Match award as #TeamIndia beat Bangladesh in Adelaide. 👌 👌
— BCCI (@BCCI) November 2, 2022
Scorecard ▶️ https://t.co/Tspn2vo9dQ#T20WorldCup | #INDvBAN pic.twitter.com/R5Qsl1nWmf
ஆனால் 2வது பாதியில் சிறப்பாக விக்கெட்களை அள்ளினோம்.விராட் கோலி எங்களுக்காக எப்போதுமே இருக்கிறார். உலகக்கோப்பையில் அவர் ஆடும் விதம் ஆச்சரியத்தை கொடுக்கிறது. இதே போல கே.எல்.ராகுலும் இன்று சிறப்பாக ஆடியுள்ளார். அவர் எப்படிபட்ட வீரர் என எங்களுக்கு தெரியும். அவர் நன்றாக ஆடினால் ஆட்டத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வார் என அவர் கூறியுள்ளார்.