இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை தொடர்ந்து நேற்று நெதர்லாந்து அணியையும் பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா ,விராட் கோலி,சூரியகுமார் யாதவ் ஆகியோயே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து மிகவும் எளிதாக இப்போட்டியை இந்திய அணி வென்றது.இந்நிலையில் தான் அரை சதம் அடித்ததை பற்றி பேசிய ரோஹித் சர்மா ,நான் அடித்த அரைசதம் குறித்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சி இல்லை.
ஆனால் ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியமாகும்.அந்த ரன் நல்ல முறையில் வந்ததா இல்லை மோசமான முறையில் வந்தது எல்லாம் என்பது குறித்து கவலை இல்லை. ரன்கள் அடிப்பதன் மூலம் வீரர்களுக்கு உத்வேகம் கிடைக்கும் என்று ரோகித் சர்மா கூறினார்.

இந்த நிலையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை பெர்த் நகரில் விளையாடுகிறது.