இந்திய அணி நேற்று நடைபெற்ற தென்னாப்ரிக்காவிற்கு எதிரான T20 தொடரின் முதல் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது. வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது.இது போன்ற ஆட்டத்தில் விளையாடும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
கடினமான சூழ்நிலையில் ஒரு அணி எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம். அதனால் இந்த போட்டி மிகவும் முக்கியமானது. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று முதலில் எதிர்பார்த்தோம். ஆனால் ஆட்டம் முழுவதும் பந்துவீச்சாளர்கள் கையே ஓங்கி இருக்கும் என்று நினைக்கவில்லை.
சொல்லப்போனால் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி வெற்றி பெற்றது. நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, சிறிது நேரத்தில் முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.

ஆட்டத்தின் திருப்புமுனை அதுதான். பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது இன்றைய போட்டி சிறந்து எடுத்துக்காட்டு என்றார் ரோஹித் சர்மா. இந்நிலையில் அடுத்த போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி கௌஹாத்தியில் நடைபெற இருக்கின்றது