நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரில் ஷமி பந்து வீசினார். கடைசி ஒவேரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷமி அற்புதமாக பந்துவீசி இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.
இந்நிலையில் கடைசி ஓவரில் திடீரென ஷமி பந்துவீசியது ஏன் என ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது ,நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம் என நினைக்கிறேன். எனினும் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசிவரை களத்தில் ஒரு பேட்டர் இருக்க வேண்டும். அதனை சூர்யகுமார் யாதவ் செய்துக் கொடுத்தார்.
இந்த களத்தில் பந்துகளை அடித்து ஆடுவதைவிட, கிடைக்கும் கேப்பில் தட்டிவிட்டால் சுலபமாக ரன்களை குவிக்கலாம். அந்தவகையில் இது சிறந்த பயிற்சி ஆட்டம்.முகமது ஷமிக்கு ஓவர் கொடுக்கும் திட்டமே கிடையாது.

அவர் நீண்ட நாட்களுக்கு பின் வந்திருப்பதால், திடீரென கடைசி ஓவரை கொடுக்கலாம் என தோன்றியது. இக்கட்டான சூழலில் அவரை கொண்டு வந்து சவால் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதை செய்தேன், அதன் பலனையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என ரோகித் சர்மா கூறினார்