இந்திய அணி நேற்று நடந்த முடிந்த தென்னாப்ரிக்காவிற்கு எதிரான T20 போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 237/3 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 221 /3 ரன்களை மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பலர் நன்றாக விளையாடினாலும் சூரியகுமார் யாதவின் ஆட்டம் மட்டும் தனியாக தெரிந்தது.பந்தை நாலா பக்கமும் பறக்கவிட்ட சூர்யகுமாரை பற்றி ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது ,சூர்யகுமார் யாதவை இனி விளையாடவைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த போட்டிகளிலும் அவரை விளையாட வைக்காமல் நேரடியாக அக். 23ம் தேதி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கலாம் என நினைக்கிறேன்.

ஏனென்றால் அவரை இதே போன்று மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் எனக் கூறினார். இந்நிலையில் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான கடைசி போட்டியில் சூரியகுமார் யாதாவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது