இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் கே.எல் ராகுல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோஹித் அதிரடி காட்ட, கோலி நிதானமாக விளையாடி வந்தார். இந்நிலையில் ரோஹித் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
Rohit Sharma surpasses Yuvraj Singh for MOST sixes in T20 World Cups by an Indian #T20WorldCup #RohitSharma #YuvrajSingh #ViratKohli pic.twitter.com/0ZsIpUwkCB
— InsideSport (@InsideSportIND) October 27, 2022
இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் 34 சிக்ஸர்களுடன் முதலிடத்தை பிடித்தார். யுவராஜ் சிங் 33 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.