Skygain News

ரோஹித் ஷர்மாவிற்கு ஏற்பட்ட காயம்..இப்போ எப்படி இருக்காரு தெரியுமா ?

T20 உலகக்கோப்பையில் இந்திய அணிஅரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.இதில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.இதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்ட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

.

இந்த தொடர் முழுவதும் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை தவிர மற்ற ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா தனது பேட்டிங்கில் தாக்கததை ஏற்படுத்த இன்று தீவிர பயிற்சியில் இறங்கினார்.

அப்போது, பந்துவீச்சாளர் எறிந்த பந்து, ரோகித்தின் கையை பதம் பார்த்தது. இதனால் வலியால் துடித்த ரோகித் பேட்டிங் செய்யாமல் அப்படியே ஓரமாக அமர்ந்தார். அதனால் பதறி போன இந்திய அணி நிர்வாகிகள் ரோகித்துக்கு சிகிச்சை அளித்தனர்.இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா பயிற்சியிலிருந்து பாதியில் விலகினார்.

இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதன் பிறகு சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங் பயிற்சி செய்ய வந்தார். இதனை பார்த்ததும் தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More