Skygain News

இந்திய அணியில் நிகழும் திடீர் மாற்றம்..ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்..!

இந்திய அணி தற்போது நடைபெற இருக்கும் T20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லவேண்டும் என்பதே பல இந்திய ரசிகர்களின் எண்ணமாக இருக்கின்றது. கோப்பையை இந்திய அணி வென்று பல வருடம் ஆனதால் இம்முறை கோப்பையை வென்று அந்த தாகத்தை இந்தியா தணிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இந்நிலையில் அந்த போட்டியில் களம் காண ராத்தி சர்மா புது திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.அதாவது பேட்டிங் வரிசையை வலுப்படுத்த ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார்.

அதன்படி ரிஷப் பண்ட் அல்லது தீபக் ஹூடா என இரண்டு பேரில் ஒருவரை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம் என ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளார். அதன்படி வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை நீக்கிவிட்டு பேட்ஸ்மேன் ஒருவரை கூடுதலாக சேர்க்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனால் நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என மூன்று பேட்ஸ்மன்களும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் வெற்றி பெற உதுவுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.