இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது. இருப்பினும் இந்திய அணியில் சில குறைகள் பளிச்சின தெரிந்தது. இதனை ரோஹித் ஷர்மாவே தெரிவித்துள்ளார். போட்டி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித், ஹைதராபாத் எனக்கு பிடித்த இடம். டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய நினைவுகள் இன்னும் இருக்கிறது.
மூன்று போட்டிகளிலும் வெவ்வேரு பேட்டர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது, பேட்டிங் பலத்தை காட்டுகிறது. பும்ரா, ஹர்ஷல் காயத்தில் மீண்டு வந்தப் பிறகு சிறப்பாக செயல்படவில்லை. அவர்கள் செட்டில் ஆக கூடுதல் நேரம் எடுக்கும் என நினைக்கிறேன். தென்னாப்பிரிக்க தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

இந்திய வேகப்பந்து வீச்சு துறையில் இருக்கும் பும்ரா, புவி, ஹர்ஷல் ஆகியோர் தொடர்ந்து அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருவது கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி அடுத்ததாக விளையாடவுள்ள தென்னாப்ரிக்காவிற்கு எதிரான தொடரில் இதனை சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது