இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹர்திக் பாண்டியாவின் அபாரமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றது. இதனை நாடு முழுவதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இருப்பினும் இந்தியா அணி தங்கள் முழு பலத்திற்கு அன்று விளையாடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக பேட்டிங்கில் இந்திய பேட்ஸ்மேன்கள் கோஹ்லி மற்றும் ஹர்திக் பாண்டியாவை தவிர அனைவருமே சற்று தடுமாறினர். அதிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
அதன் பிறகு தற்போது கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றார் ராகுல். இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா கே.எல்.ராகுலை கண்டித்ததாக தகவல் வந்துள்ளது. இவர் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு சமீபத்தில் ஜிம்பாப்வே தொடர் மூலம்தான் இந்திய அணிக்கு திரும்பினார்.
உடனே இவருக்கு கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதில் இவரது பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையிலும் ராகுலுக்கு ஆசியக் கோப்பையில் துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் பார்மை நிரூபிக்கவில்லை.இதனால் அப்சட்டான ரோஹித் ராகுலை கண்டித்துள்ளார்.
ரிஷப் பந்தை நீக்கி உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது ரிஸ்க் ஆன முடிவுதான். ஏனென்றால் அணி உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. அதை காப்பாற்றவேண்டியது உங்கள் பொறுப்பு. எனவே அடுத்த ஆட்டத்தில் பொறுப்புடன் ஆடுங்கள். இல்லையென்றால் கடுமையான முடிவுகள் எடுக்க நேரிடும் என்றாராம் ரோஹித் ஷர்மா.