இந்திய அணி தற்போது T20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றது இந்திய அணி. அப்போது மைதானத்தில் ஏராளமான குழந்தைகள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை இந்திய வீரர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது துருசில் செளகான் என்ற 11 வயது சிறுவன் மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.முதலில் அந்த சிறுவனை ரோகித் சர்மா தான் பார்த்துள்ளார். அந்த சிறுவன் தனது வயதையும் மீறி அதிவேகமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார்.
குறிப்பாக இன்சுவிங் யாக்கர்களை சிறுவயதில் கற்றுக்கொண்டு அசத்திருக்கிறார். இதனைப் பார்த்து ரோகித் சர்மா அந்த சிறுவனை அழைத்து பாராட்டி இருக்கிறார்.இதனை தொடர்ந்து தமக்கு வலை பயிற்சியில் பந்து வீசுமாறு அந்த சிறுவனை ரோகித் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
𝐓𝐡𝐢𝐬 𝐌𝐚𝐧 𝐢𝐬 𝐚𝐫𝐫𝐨𝐠𝐚𝐧𝐭! 𝐍𝐨?😅💙@ImRo45 Rohit Sharma pic.twitter.com/YFURzVBj8m
— Immy|| 🇮🇳 (@TotallyImro45) October 16, 2022
இதனால் ஆச்சரியத்தில் உறைந்த அந்த சிறுவன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பந்து வீசினார்.தற்போது இந்த வீடியோ தான் இணையதளங்களில் செம வைரலாகி வருகின்றது