ஆஸ்திரேலியா அணியுடனான T20 தொடர் நாளை ஆரம்பமாகும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாங்கள் தினந்தோறும் கற்று வருகிறோம். முன்னேற்றம் கண்டு வருகிறோம். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இரண்டுமே சவாலான அணிகள் என்பதால் நிச்சயம் இந்த அனுபவம் கை கொடுக்கும்.
எங்களுக்கு 10 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் விழுதால் எப்படி விளையாட வேண்டும் என்றும் தெரியும். 50 ரன்களுக்கு விக்கெட் விழாமல் இருந்தால் எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்றும் தெரியும். எங்களுடைய புதிய அவிராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.
அவர் ஆட்டத்தை கண்டு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் உலககோப்பை போட்டிக்கு மூன்றாவது தொடக்க வீரரை அழைத்துச் செல்லவில்லை. அதற்கு காரணம் விராட் கோலி எங்களுக்கு அந்த ஒரு வாய்ப்பை கொடுப்பார். தேவை ஏற்பட்டால் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவார்.

ஆனால் இப்போதைக்கு கே எல் ராகுல் தான் எங்கள் அணியின் தொடக்க வீரர். டாப் ஆர்டரிலில் அவருடைய இருப்பு அணி மிகவும் முக்கியம். கே எல் ராகுலின் பல ஆட்டங்கள் ரசிகர்களால் கவனிக்காமல் போய்விடுகிறது என்று ரோகித் கூறினார். இந்நிலையில் இவர் கூறியதன் மூலம் ராகுலின் மீது மேலும் அழுத்தம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.