இந்திய அந்த சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகமும், வீரர்களும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்நிலையில் டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்துவரும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களில் தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் 11-12 வீரர்களை மட்டுமே வைத்து வலுவான அணி காம்பினேஷனை முயற்சி செய்து அந்த அணியின் மீது நம்பிக்கை வைத்து டி20 உலக கோப்பைக்கான காம்பினேஷனை உறுதி செய்யவேண்டும் என்பதே பல முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது.

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் கூறியுள்ளது என்னவென்றால், டி20 உலக கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் வலுவான காம்பினேஷனுடன் ஆடி நிறைய மாற்றங்களை செய்யாமல் டி20 உலக கோப்பைக்கான காம்பினேஷனை உறுதி செய்யவேண்டும்.
நல்ல வேகம் மற்றும் பவுன்ஸை தனது பவுலிங்கில் பெற்று, அதையே தனது பலமாகவும் பெற்றிருக்கும் ஷமி கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவேண்டும். நான் குல்தீப் யாதவையும் எடுப்பேன். ஆனால் கேஎல் ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.