தமிழகத்தில் பெரம்பலூர் கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி பெரம்பலூரில் நேற்று மாலை 4 மணிக்கு பேரணி நடைபெற்றது. பாலக்கரையில் தொடங்கிய பேரணியனாது வெங்கடேசபுரம்,ரோவர் வளைவு,சங்குப்பேட்டை வழியாக சென்று வானொலி திடலில் நிறைவடைந்தது.
இதில் 200க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து பேரணியில் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி பெரம்பலூர் நகர் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருச்சி மத்திய மண்டல காவல்த்துறை தலைவர் சந்தோஷ்குமார்,துணைத்தலைவர் சரவணசுந்தர்,பெரம்பலூர்,அரியலூர் ,திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 900 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.பேரணி நடைபெறும் வழித்தடம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் வானொலிதிடல் ஆகிய பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.