விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார்.இது குறித்து பேசிய ருத்துராஜ் கெய்க்வாட், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஐந்தாவது சிக்ஸர் அடித்த பிறகு என் மனதில் தோன்றியது ஒரே ஒருவர்தான்.
அது யுவராஜ் சிங் தான். அவர் 2007 டி20 உலக கோப்பையில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸரை அடித்ததை நான் சிறு குழந்தையாக இருக்கும் போது பார்த்திருக்கிறேன். என்னுடைய பெயரும் அவருடைய பெயருடன் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.அதனால் எப்படியாவது நான் ஆறாவது சிக்ஸர் அடிக்க வேண்டும் என நினைத்தேன்.
என் கனவில் கூட நான் நினைத்தது கிடையாது, ஒரே ஓவரில் ஆறு சிக்ஸரை நான் அடிப்பேன் என்று..! தற்போது யுவராஜ் சிங் உடன் எனது பெயரும் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. நான் ஆறு சிக்ஸர்களை அடித்த பிறகு நாம் ஏன் ஏழாவது சிக்சரையும் அடிக்க கூடாது என்று எனக்குத் தோன்றியது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஓவரில் ஆறு சிக்சர் அடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.இந்த வெற்றிக்கும் என்னுடைய சாதனைக்கும் காரணம் என்னுடைய குடும்பமும், அணி வீரர்களும் தான். இதை மகாராஷ்டிரா மக்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன் ஈன்றார் ருதுராஜ்.