சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், தென்னிந்திய விமான நிலையங்களின்செயல் இயக்குனராக, S.G. பணிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஏஸ்கனவே வடகிழக்கு மாநிலங்களின் விமான நிலையங்களின் செயல் இயக்குனராக பணியாற்றி வந்தார். அவர் தற்போது சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள, தென்னிந்திய விமான நிலையங்களின் தலைமையகத்திற்கு, செயல் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கனவே இந்த பதவியில் இருந்த R. மாதவன் கடந்த ஜூலை மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்பு காலியாக இருந்த இடத்திற்கு தற்போது,S.G. பணிக்கர் செயல் இயக்குனராகியுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை, திருச்சி விமான நிலையங்களில் பணியாற்றியுள்ளார்.

இப்போது தென் இந்தியா விமானநிலையங்களின் செயல் இயக்குநரான பணிக்கா் கட்டுப்பாட்டில், தமிழ்நாடு, (சென்னை விமானநிலையம் நீங்கலாக) ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 26 விமான நிலையங்கள் உள்ளன.