டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணி வெளியேறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்டீபன் மற்றும் மேக்ஸ் அதிரடியாக விளையாடி முதல் விககெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. ஸ்டிபன் 37 ரன்களிலும், மேக்ஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் அதன் பிறகு களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.இதன் மூலம் நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே ரன் குவிக்க தடுமாறியது.

இறுதியில் நெதர்லாந்து பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சை தென்னாபிரிக்கா அணி சமாளிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது.இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டு வெளியேறியது தென்னாபிரிக்கா அணி.