நடிகர் விஜய் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகின்றார். அவர் இந்தளவிற்கு வெற்றிபெற்றுள்ளார் என்றால் அதற்கு அவரின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மிக முக்கியமான காரணம் ஆவார். ஆனால் தனது தந்தை மீதுள்ள கோபத்தால் அவருடன் பேசாமல் இருக்கிறார் விஜய்.
இந்நிலையில் தனது மகன் குறித்து பேட்டி ஒன்றில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.அவர் கூறியதாவது , நாங்கள் இருவரும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒரு கட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள்.
பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அவர்களுடைய ஆட்டிடியூட் மாறிவிடும். இது எல்லார் வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.அப்படி இருக்கும் சூழ்நிலையில் நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் தற்சமயம் இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.