ஆஸ்திரேலியாவில் T20 உலகக்கோப்பை இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்றைய தினம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அவர் கூறியதாவது ,முதலில் இந்தியா – பாகிஸ்தான் முதல் போட்டி குறித்து கூறுகிறேன். இதில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என தோன்றுகிறது. நான் ஒரு இந்தியன் என்பதால் இதனை கூறவில்லை.
இரு அணிகளின் பலத்தை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய களத்தில் இந்தியா நன்றாக செயல்படும் எனத்தோன்றுகிறது.அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் என்று பார்த்தால், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் முன்னேறும் எனத்தெரிகிறது.

மேலும் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கின்றது.தற்போதுள்ள இந்த அணி நன்கு சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளும் சம அளவில் பொருந்தியுள்ளது. இதனால் கோப்பையை இந்திய அணி வெல்லும் என எனக்கு தோன்றிக்கொண்டே உள்ளது என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.