இந்திய சினிமாவையும் தாண்டி உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் இருவரும் சந்தித்தது தான் தற்போது செம வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர்.ரகுமானும், மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் கலந்து கொள்வதும் வழக்கமான ஒன்று தான்.
மேலும் சச்சின் உடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பும் போது, பல முறை ஏ.ஆர்.ரகுமான் தங்களின் நஇந்நிலையில் நேற்று முன்தினம், இசை புயலும்… கிரிக்கெட் புயலும் சந்தித்து நட்பு பாராட்டியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் நேவி ப்ளூ கலர் ஃபார்மல் ஷர்ட் அணிந்து மிகவும் எளிமையாக காட்சிளிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் பர்புல் நிற ப்ளேசர் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தில் சச்சின் தன்னுடைய நண்பன் ஏ.ஆர்.ரகுமான் தோள்மீது கை போட்டபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
A Sunday well spent with இசைப்புயல்! ♥️🎶 https://t.co/nDB5m3Bh5R
— Sachin Tendulkar (@sachin_rt) October 17, 2022
இந்த புகைத்தடத்தை பதிவிட்டு சச்சின் இசைப்புயல் என தமிழில் பதிவிட்டு, ஞாயிற்று கிழமையை ஏ.ஆர்.ரகுமானோடு செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.ட்பு குறித்து மேடைகளில் பகிர்ந்து கொண்டுள்ளார்.தற்போது இந்த ட்வீட் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது