Skygain News

சசிகலா வீட்டில் ஏற்பட்ட துக்க சம்பவம்..! தீவிர விசாரணையில் போலீசார்…

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவருடைய அண்ணன் மகன் விவேக். இவர் ஜாஸ் சினிமா உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா. தம்பதிகள் இருவரும் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல அபார்ட்மென்ட்டில் வசித்து வருகின்றனர் .

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறுகள், சச்சரவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் சசிகலாவிடம் இந்த பிரச்சனையை கீர்த்தனா கொண்டு சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர் விவேக்கை அனுசரித்து செல்லவேண்டும் என அறிவுரை கூறியுள்ளாராம் . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேக் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார் . அப்போது விவேக்கிற்கும் கீர்த்தனாவுக்கும் இடையே வழக்கமான சண்டை தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை தீவிரமானது.

விவேக் எத்தனையோ சமாதானங்கள் கூறியும் கீர்த்தனா ஆறுதல் அடையவில்லை . இதனையடுத்து கீர்த்தனா வீட்டில் இருந்த, தேவையில்லாத மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி விட்டார். பேசிக்கொண்டே இருந்த கீர்த்தனா தானாக சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தார்.

அதை கண்டு அதிர்ந்து போன விவேக் உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனையில் கீர்த்தனாவை சேர்த்தார். அங்கு கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின்படி, அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விவேக்கிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சசிகலா குடும்பத்தில் நடந்த இந்த சோக சம்பவம், அதிமுக, அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More