சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில்… இந்த விழாவிற்கு இந்த படத்தில் நடித்திருந்த சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பட குழுவினர் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் ஏறி பேசிய காமெடி நடிகர் சதீஷ் பாம்பேவில் இருந்து வந்திருக்கும் சன்னிலியோன் பட்டுப்புடவை கட்டி வந்திருப்பதாகவும், ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் என இருவரது ஆடையையும் ஒப்பிட்டு விமர்சிப்பது போல் பேசி இருந்தார். சதீஷின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பாடகி சின்மயி, இயக்குனர் நவீன் போன்ற பலர் ட்விட்டர் மூலம் சதீஷின் பேச்சுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து தர்ஷா குப்தா பேச சொன்னதைதான் நான் ஸ்டேஜில் பேசினேன் என விளக்கம் கொடுத்த வீடியோ வெளியிட்டார் சதீஷ்.இதற்கு பதில் தெரிவித்த தர்ஷா,சதீஷ் என் மீதே திருப்பி விடுவது சரியா, நான் உங்களை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேனா? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பற்றி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவாங்களா??
Sathish is this good way to turn on me, that I asked u to tell like this in stage? It's very strange. Yaaravathu enna pathi, stage neenga asingama pesunganu solluvangala?? Enakum annaiku avlo hurt uh tha irunthuchu, but na atha perusa kaatikala. But ipo ipadi solrathu, not good.
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) November 10, 2022
எனக்கும் அன்னைக்கு அவ்ளோ ஹர்ட்டா இருந்துச்சு, ஆனா நான் பெரிதாக காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை… இவ்வாறு நடிகை தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார்.தற்போது இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது