தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி இடத்தில் இருக்கும் சாய் பல்லவி, தன்னை தேடிவரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், மனதிற்கு நிறைவான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, மற்றொரு விஷயத்தில் கவனம் செலுத்தி வருவதால், பல பட வாய்ப்புகளை மறுத்து வருவதாகவும், எனவே இவர் திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஜார்ஜியாவில் தன்னுடைய மருத்துவ படிப்பை படித்த இவருக்கு திடீர் என ‘பிரேமம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே… நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது மருத்துவ தன்னுடைய படிப்பு யாருக்கும் பயன் இல்லாமல் போய் விட கூடாது என, தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறாராம்.

இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் பரபரப்பாக ஒரு பக்கம் நடந்து வருவதாக கூறப்படும் எனவே, சாய் பல்லவி… மருத்துவ பணிக்காக திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளதுஇதன் காரணமாக சாய் பல்லவியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்