விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . இந்த நிலையில் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்ராஜ் என்பவருடைய வீட்டில் பண்ருட்டி வட்டம் திருவதிகை சேர்ந்த ஷேக்அசீம் , பெரியகாட்டு பாளையம் நவீன் காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த வினோத், சித்தானங்கூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி மேலும் 17வயது சிறுவன் உட்பட 6 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கணிப்பாளர் ஸ்ரீ நாதாவின் தனிப்படை குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் சத்தியானந்தம் தலைமையிலான போலீசார் அந்த 6 பேரையும் பிடித்து திருவெண்ணெய் நல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் .
இதுகுறித்து திருவெண்ணெய் நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் பழனி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவர்களிடம் இருந்து 7 செல்போன் 3 மோட்டார் சைக்கிள் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . இளைய சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் 6 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .