தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா.கடந்த 12 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது யசோதா என்ற படத்தில் சோலோ நாயகியாக நடித்துள்ளார்.இப்படம் சில நாட்களில் திரையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் எனும் அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருந்த அவர், சமீபத்தில் மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏறியபடி யசோதா படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து பதிவிட்டிருந்தார்
அந்த பதிவுக்கு பின்னர் நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிவந்த செய்திகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறி சமீபத்திய நேர்காணலில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதில் அவர் பேசியதாவது : “இந்த காலகட்டத்தில் என்னுடைய சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருந்தன. ஆனால் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்துவிட்டேன் என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
A True Fighter 💪🔥#Samantha gets emotional speaking about her health issues!! #Yashoda #SamanthaRuthPrabhu @Samanthaprabhu2 #TeluguFilmNagar pic.twitter.com/UsKMGS0cpM
— Telugu FilmNagar (@telugufilmnagar) November 8, 2022
ஆனால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் என்னுடைய உடல்நிலை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. நான் இன்னும் சாகவில்லை. அதுபோன்ற செய்திகள் தேவையற்றது” என தன்னைப்பற்றிய நெகடிவிட்டி குறித்து பேசி அந்த நேர்காணலில் சமந்தா கண்கலங்கியதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.