தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார். தான் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்பிக்கையுடன் கூறினார். சமந்தாவின் அறிவிப்பை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.இந்நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் கடந்த நவம்பர் 11-ந் தேதி யசோதா திரைப்படம் வெளியானது.
இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார் சமந்தா. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வந்தது.இதைத்தொடர்ந்து சமந்தாவின் நிலை தற்போது மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

இதை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். குணமாகி வருகிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில் இப்படி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரே என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். மேலும் சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.