தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. நாயகியாக மட்டுமல்லாமல் முதன்மையான கதாபாத்திரங்களிலும் ,சோலோ ஹீரோயினாகவும் அசத்தி வருகின்றார் சமந்தா. இவரது யசோதா உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.பாலிவுட்டிலும் அக்ஷய் குமாருடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.தன்னுடைய திருமணம், நாக சைத்தன்யாவுடனான விவாகரத்து முடிவு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காத வகையில், இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதீஜா என்ற கேரக்டர் இவரை ரசிகர்களிடையே மேலும் பேவரைட்டாக மாற்றியுள்ளது.சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தவர் சமந்தா. சமீப காலங்களாக இவரது எந்த போட்டோஷுட்டும் வெளியாகவில்லை.

இடையில் யசோதா டீசர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சமந்தாவின் முகத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்தான் தொடர்ந்து புகைப்படங்களை எடுக்காமல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.முன்னதாக இவர் நடிக்க வந்த புதிதில் இதேபோன்ற பிரச்சினைகளை சந்தித்தார்.
அப்போது அது சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதே பிரச்சினையில் சிக்கியுள்ளார் சமந்தா. இதையடுத்து விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சமந்தா பறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கேட்ட ரசிகர்கள் பதட்டத்தில் இருக்கின்றனர்.