தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கின்றார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த சமந்தா தற்போது சோலோ ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் சமந்தா நடித்த படங்கள் சில எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய்யின் கத்தி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏறடுத்தியது. அதைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த சமந்தா வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார்.
மேலும் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இளம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சமந்தாவிற்கு தற்போது பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. தற்போது மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் யசோதா படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார் சமந்தா.
இந்நிலையில் சமந்தா இனி வரும் எந்த ஒரு படத்திலும் கிளாமராக நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்மின்றி நடிகர்களுடன் எந்த ஒரு நெருக்கமான காட்சியிலும் நடிக்க மாட்டார் என்று கூறுகின்றனர். மேலும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு கிளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கறாராக சொல்லிவிடுகின்றாராம் சமந்தா