தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கிலும் மகேஷ் பாபு உட்பட டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா அரியவகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் மிக விரைவாக குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம் சமந்தா.மயோசிடிஸ் நோய்க்கு உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக சமந்தா விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.