தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா.இயக்குநர்கள்ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில்தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில்பான் இந்தியா படமாக ‘யசோதா’ உருவாகியிருக்கிறது.
இந்தப்படம்உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் கூட சினிமா மீது நடிகை சமந்தா காட்டும் அர்ப்பணிப்பு, உலகம் முழுவது இருக்கக்கூடிய அவரது ரசிகர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.இந்நிலையில் இப்படம் சென்சார் செய்யப்பட்டு U /A சான்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது