இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியிலும் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது .இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், சஞ்சு சாம்சனை முந்தி வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட் வழக்கம் போல சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கப்படுவதற்கு முன்னதாகவே வங்கதேசம் தொடர் வரை ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்து வைத்துள்ளனர். எனவே வங்கதேசத்துடனான 3 போட்டிகள் தான் பண்ட்-க்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் புதிய தேர்வுக்குழு வந்தால் பண்ட்-ன் நிலையை புரிந்து அவரை நீக்க அதிக வாய்ப்புள்ளது.