இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான போட்டியில் இப்போட்டியில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்துவிட்டு, பெவிலியன் திரும்பியதும் அணியில் மருத்துவர்கள் உடனே ரிஷப் பந்தை பெஞ்சில் படுக்க வைத்து, முகுது பகுதியில் மருந்தை தேய்க ஆரம்பித்தார். அப்போது, ரிஷப் பந்த் வலியால் துடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அன்பிட்டாக இருந்த ரிஷப் பந்தை வம்பாக, வலுக்கட்டாயமாக்க அணியில் சேர்க்க காரணம் என்ன என பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். காயத்தால் அவதிப்படும், அதுவும் தொடர்ந்து சொதப்பி வரும் ஒரு வீரருக்கு வாயப்பு கொடுத்தாலும் கொடுப்போம தவிர, சாம்சனுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்ற முடிவில் இருக்கும் இந்திய அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இன்னும் சிலரோ, சாம்சன் உடனே இந்திய கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்டு, வெளிநாட்டில் எதாவது ஒரு அணிக்கு விளையாட செல்ல வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.