சாம்சங் நிறுவனத்தின் Galaxy S23 Series புதிய மாடல் மொபைல் ஃபோன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில், சாம்சங் Galaxy S23 Series மாடல் ஃபோனை அந்நிறுவன இயக்குநர் குஃப்ரான் ஆலம் அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 200MP சென்சார், தனித்துவமான விவரங்களுடன் படங்களை எடுக்கும் வகையில் அடாப்டிவ் பிக்சல்களுடன் புதிய மாடல் ஃபோன் உள்ளதாக தெரிவித்தார். சாம்சங் Galaxy S23 Series-க்கான முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று சாதனை செய்துள்ளதாகவும் குஃப்ரான் ஆலம் தெரிவித்தார். நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த மாடல் ஃபோனின் விலை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
