இந்தியா அணி T20 உலகக்கோப்பைக்காக தயாராகி வருகின்றது. அதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. நேற்று முதல் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்று வருகின்றது. இந்நிலையில் இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், பும்ராவின் காயத்திற்கு ரோஹித் ஷர்மாதான் முழுக் காரணம் என அதிரடியாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது , ‘‘பும்ராவின் உடல்நலம் எவ்வளவு முக்கியம் என்பதை ரோஹித் ஷர்மா, டிராவிட் இருவரும் உணரவில்லை. முதல் போட்டியில் ஓய்வு கொடுத்துவிட்டு, இரண்டாவது போட்டியில் உடல்நலம் தேரியிருக்கும் என நினைத்து விளையாட வைத்தனர். மூன்றாவது போட்டியில் வற்புறுத்தி களமிறக்கினார்கள்.

இதனால்தான், தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் இவரது முதுகு வலி பிரச்சினை பெரியதாகியிருக்கிறது’’ எனக் கூறினார். இவ்வாறு வெளிப்படையாக பங்கர் பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது